சிட்னி மேற்கில் 83 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
நேற்று மாலைவேளையிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வயோதிப பெண் தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வீதியில் வந்துள்ளார். அவருக்கு உதவும் வகையில் குறித்த நபர் வீடுவரை சென்றுள்ளார்.
பின்னர் மூதாட்டியை வீட்டுக்குள் இழுத்துச்சென்று வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் வீட்டு சாவியையும் எடுத்தக்கொண்டு அவர் தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்ட வயோதிப பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பான படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.