சிட்னி தென்மேற்கு பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் வயோதிப பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பெண்ணின் 34 வயது மகனே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவுவேளையிலேயே இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் துப்பாக்கி தாரிகளின் இலக்கு அல்லவெனவும், சம்பவ இடத்திலிருந்து மூவர் தப்பியோடியுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே கொல்லப்பட்ட பெண்ணின் மகன் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தாயின் கொலையுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேட்டை பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.