நியூ சவூத் வேல்ஸ் மத்திய வடக்கு கடற்கரை பகுதியில் நபரொருவர்மீது தாக்குதல் நடத்தி கையை துண்டித்த 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞன் தேடப்பட்டுவருகின்றார்.
59 வயது நபரொருவரின் இடது கையே துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னர், தாக்குதல் நடத்திய இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் பயணித்த வாகனத்தில் இருந்து கத்தியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது.