ஆஸ்திரேலியாவில் மார்ச் மாதத்துக்குரிய வேலையின்மை வீதம் சற்று அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவர திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் 4 சதவீதமாக இருந்த வேலையின்மை வீதம் தற்போது 4.1 வீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் வரிப்போரால் உலக பொருளாதாரத்தில் ஸ்தீரமற்ற நிலை உருவாகியுள்ளது. எனவே வேலையின்மை வீதம் அதிகரிப்பதில் இதுவும் தாக்கம் செலுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
ஆல்பிரட் சூறாவளியால் ஊழியர்கள் வேலைசெய்த வேலை நேரம் குறைவடைந்துள்ளது. அதேவேளை, கடந்த மார்ச் மாதம் 32 ஆயிரம் பேர் தொழிலில் இணைந்துள்ளனர். 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.