சிட்னி தென்மேற்கு பகுதியில் எரிந்த காருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. வன்முறை கும்பலால் கடத்தி செல்லப்பட்டிருந்த 45 வயது பெண்ணின் சடலமாக இது இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
பாங்க்ஸ்டவுனில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு 10.30 மணியளவில் கறுப்பு அடை அணிந்து முகத்தை மூடிய ஐந்து ஆண்கள் கொண்ட கும்பலொன்று நுழைந்துள்ளது.
இக்குழு, எட்டு வயது சிறுவனை பேஸ்பால் மட்டையால் கடுமையாக தாக்கியுள்ளது. அவர் தற்போது கோமா நிலையில் உள்ளார். அதன்பின்னர் குறித்த பெண்ணை கடத்திச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, பெவர்லி ஹில்ஸில் உள்ள வெல்ஃபேர் அவென்யூவில் காரொன்று பற்றி எரிவதாக அவசர சேவைகள் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்க போராடினர், எனினும், வாகனம் தீக்கிரையானது. பிறகு வாகனத்துக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடத்தி செல்லப்பட்ட பெண், வாகனத்துக்குள் வைத்து கொளுத்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சபா.தயாபரன்