மெல்பேர்ண் மேற்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய நபரொருவர், பொலிஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நபரொருவர் ஆயுதம் ஏந்தி அச்சுறுத்துவதாக பொலிஸாருக்கு நேற்றிரவு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆயுதத்தை கீழே வைக்குமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலை அவர் ஏற்கவில்லை. பிறகு பொலிஸாரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்ததால் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துணை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் சிகிச்சை அளித்தாலும் அவர் உயிரிழந்துவிட்டார். துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஏதுவாக அமைந்த காரணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விக்டோரிய பொலிஸாரால் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.