Northern Territory இல் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் தீ விபத்தில் பூர்வக்குடி பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்றிரவு 10.40 மணியளவில் அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர். தீயணைப்பு பிரிவனர் வருகைதந்து தீயை கட்டுப்படுத்தினர்.
பிறகு வீட்டின் படுக்கையறையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.