மெல்பேர்ணில் கடலோர நடைபாதையில் இருந்து அடித்துச்செல்லப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். ஆணொருவர் காணாமல் போயுள்ளார்.
மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே கரைக்கு வந்துள்ளார். இன்று காலைவேளையிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அவசர சேவை பிரிவுக்கு தெரியவந்த பின்னர் கடல் மற்றும் வான் வழி ஊடாக தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. மாயமாகியுள்ள ஆணை தேடும் பணி இடம்பெறுகின்றது.
அதேவேளை, கடந்த 20 ஆண்டுகளில், ஈஸ்டர் பண்டிகையின் போது 118 ஆஸ்திரேலியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என ரோயல் லைஃப் சேவிங் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.