"பிள்ளையான் தேசிய நாயகன், என உதய கம்மன்பில கூறுவதை எம்மால் ஏற்கமுடியாது." - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதுதே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இதனை குறிப்பிட்டார்.
" பிள்ளையான் புலிகள் அமைப்பில் இருந்து விலகி, எமது இராணுவத்துடன் இணைந்தமையானது போரை முடிப்பதற்கு ஓரளவு பங்களிப்பாக அமைந்தது. அதை மட்டுமே என்னால் கூறமுடியும். தேசிய நாயகன் எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச அணியில் இல்லை. எனவே, அவர் பிள்ளையானுடன் ஏன் கதைக்க முற்பட்டார் என அவரிடம்தான் கேட்க வேண்டும்." எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல பிள்ளையானுக்காக கம்மன்பில சட்டத்தரணியாக முன்னிலையாகியுள்ளமை தொடர்பில் நாம் எவ்வித தவறையும் காணவில்லை." - என சரத் வீரசேகர மேலும் கூறினார்.