ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களில் மூன்றில் ஒருவர் கணிதத்தில் தேர்ச்சி பெறத் தவறிவிடுவதாக கிராட்டன் நிறுவனத்தினால் நாடு முழுவதும் உள்ள 1,745 ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்களிடம் நடாத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது.
2023 ஆம் ஆண்டு சர்வதேச கணிதத் தேர்வில், ஆஸ்திரேலியா 4 ஆம் ஆண்டு மாணவர்களில் 13 சதவீதம் பேர் மட்டுமே கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் .இங்கிலாந்தில் 22 சதவீதமும் சிங்கப்பூரில் 49 சதவீதமும் இருந்தனர்.
ஆஸ்திரேலியாவில் கணிதம் பல தசாப்தங்களாக முன்னுரிமையற்றதாக இருந்து வருகிறது’ என்று அறிக்கையின் முதன்மை ஆசிரியரும் கிராட்டன் நிறுவன கல்வித் திட்ட இயக்குநருமான ஜோர்டானா ஹண்டர் கூறுகிறார்.
(The National Assessment Program )தேசிய மதிப்பீட்டுத் திட்டம் - எழுத்தறிவு மற்றும் எண் கணிதம் என்பது ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு 3, 5, 7 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் வழங்கப்படும் அடிப்படைத் திறன்களை மையமாகக் கொண்ட ஒரு தொடர் தேர்வுகளாகும்.
90 சதவீத மாணவர்கள் எண்ணியல் தேர்ச்சி, கணிதத்தை எவ்வாறு சிறப்பாகக் கற்பிப்பது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல் , தர உறுதி செய்யப்பட்ட பாடத்திட்டப் பொருட்கள் மற்றும் கடுமையாக மதிப்பிடப்பட்ட மதிப்பீடுகள், வகுப்பறைகளில் சிறந்த நடைமுறையைச் செயல்படுத்த உதவுவதற்காக உயர்தர தொழில்முறை மேம்பாட்டில் முதலீடு, வலுவான பள்ளி மதிப்பாய்வுகள் மற்றும் கட்டாய, ஆராய்ச்சி-சரிபார்க்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளின் எண் கணிதத் திரையிடல் கருவியை அறிமுகப்படுத்துவது போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.
ஆனால் இந்த சீர்திருத்தங்களின் செலவுகள் மிகக் குறைவு - ஒரு தொடக்கப்பள்ளி மாணவருக்கு வருடத்திற்கு சுமார் $67 மட்டுமே" என்கிறார் டாக்டர் ஹண்டர் .
சபா.தயாபரன்.