இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த பாலஸ்தீன புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசெளனா கொல்லப்பட்டார்.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளை 18 மாதங்களாக தன்னைச் சுற்றியுள்ள போர் பற்றிய விபரங்களை விவரித்து வந்தவர் பெண் புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசெளனா 25, இவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில்,வடக்கு காசாவின் தெற்கு ராபா பகுதியில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் பாத்திமா ஹசெளனா உடன் கர்ப்பிணி சகோதரி உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயரிழந்தாக சொல்லப்படுகிறது.
கொல்லப்பட்ட பாத்திமா ஹசெளனா,தனது வேலையின் அபாயங்கள் மற்றும் மோதல் மண்டலத்தில் இருப்பதன் ஆபத்துகள் குறித்து நீண்ட காலமாக அறிந்திருந்தார். இருப்பினும், அவற்றை நேரடியாக எதிர்கொள்ளத் தேர்ந்தெடுத்தார், தனது வரலாறு மற்றும் அவரது மக்களின் வரலாறு ஒரு நாள் கேட்கப்படும் என்று தீர்மானித்தார்.
மேலும் அவர், ஆகஸ்ட் 2024 இல் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், 'நான் இறந்தால், எனக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் மரணம் வேண்டும், அவசர செய்திகளில் நான் இருக்க விரும்பவில்லை, அல்லது ஒரு குழுவுடன் ஒர் ஆளாக இருக்க விரும்பவில்லை' என்று கூறியிருந்தார்.
அவர் செய்திருந்த பதிவு பரவலாக பேசபட்டு வருகிறது.காசா போரின் மனித பக்கத்தை உலகுக்கு நினைவூட்டுவதாக அமைகிறது.