மெல்பேர்ணில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
30 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையான ருகா கார்ல்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான நபருக்கு, துணை வைத்தியர்கள் முதல் உதவி வழங்கி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஈஸ்டரை முன்னிட்டு விருந்து நடைபெற்றதாக அறியப்படும் இடத்தில் ஆறு ஆண்களுக்கு இடையே நடந்த சண்டையில் இக் கொலைச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் எவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.
சபா.தயாபரன்.