ஈஸ்டர் பண்டிகையின்போது நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நியூ சவூத் வேல்ஸில் 9 வயது சிறுவன் ஒருவரும் பலியாகியுள்ளார்.
நேற்று பிற்பகல் நீரில் மூழ்கிய 9 வயது சிறுவனை மீட்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இராட்சத அலை காரணமாகவே அவர் அடித்துச்செல்லப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஈஸ்டர் பண்டிகை காலத்தில் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை நீரில் மூழ்கி அறுவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
நியூ சவூத் வேல்ஸில் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் வருடாந்தம் சராசரியாக அறுவர் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை தொடர்கின்றது.
எனவே, கடற்கரைகளில் நீராடுவதற்கு செல்பவர்கள், முன்னெச்சரிக்கையாக நடத்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.