கூட்டாட்சி தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்கு பதிவு நாளை ஆரம்பம்!
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்தலுக்குரிய முன்கூட்டிய வாக்கு பதிவு நாளை ஆரம்பமாகின்றது.
இதற்காக நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு 18 மில்லியனுக்கு அதிகமானோர் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் பலர் முன்கூட்டியே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2022 கூட்டாட்சி தேர்தலின்போது 5.6 மில்லியனுக்கு அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்திருந்தனர். 1.8 மில்லியன்பேர் தபால்மூலம் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 2022 கூட்டாட்சி தேர்தலின்போது 274 கைதிகள் வாக்களித்தனர். இந்நிலையில் சிறைக் கைதிகளின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.