ஆஸ்திரேலியாவுக்கு தமது பெற்றோரை அழைத்து வர விரும்பும் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை, கூட்டணி ஆட்சியில் குறைக்கப்படமாட்டாது என எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார்.
நிரந்தர இடம்பெயர்வுக்கான வருடாந்த உட்கொள்ளலை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைப்பதற்கு லிபரல் கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதற்கான வழிமுறை இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும், பெற்றோர் விசா குறைக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் 8 ஆயிரத்து 500 பெற்றோர் விசாக்கள் லேபர் ஆட்சியின்கீழ் வழங்கப்பட்டுவருகின்றது.
கூட்டணி ஆட்சியின்கீழ் அந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஆக இருந்தது. எனவே, கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எண்ணிக்கை குறைக்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எனினும், இடம்பெயர்வு 25 சதவீதத்தால் குறைக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.