ஆஸ்திரேலியாவில் கடந்துள்ள 4 மாதங்களுக்குள் 23 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 13 முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கடந்த வருடம் மாத்திரம் 103 பெண்கள் ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த மார்ச் 14 ஆம் திகதி 19 வயது யுவதியொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் 53 வயது நபரொருவர் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். பிணை கோரப்படவில்லை.
வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதுவரை அவர் பொலிஸ் தடுப்பு காவலில் இருப்பார்.