லிபரல் கட்சியின் தேர்தல் பிரச்சார வாகனம் மோதியதில், மேற்கு சிட்னியில் உள்ள வாக்குச்சாவடி சேதமடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்கு பதிவு இன்று காலை ஆரம்பமான நிலையில், குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதால், மேற்படி பகுதியில் முன்கூட்டிய வாக்கு பதிவு பிற்போடப்பட்டுள்ளது.
பிரச்சார வாகனம் மோதியதல் சேமடைந்த வாக்கு சாவடியை புனரமைக்கும் பணி இன்று இடம்பெற்றதால், வாக்கு சாவடி மூடப்பட்டது.
சேதம் பற்றி தற்போது மதிப்பிடப்பட்டுவருகின்றது. அங்கு வாக்கெடுப்பை நடத்த முடியுமா அல்லது வேறொறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டுமா என்பது பற்றியும் ஆராயப்படுகின்றது.