மெல்பேர்ண் கிழக்கு புறநகர் பகுதியில் இன்று அதிகாலை காரொன்றை கடத்திச்சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு சிறுவர்களும், இரு சிறுமிகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தி செல்லப்பட்டகாரை பொலிஸார் பின்தொடர்ந்து சென்றனர். பொலிஸாரின் விமான பிரிவும் காரை கண்காணித்துள்ளது.
பின்னர் காரை நிறுத்திவிட்டு அதில் பயணித்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் பிடிக்கப்பட்டனர்.
இவர்களில் சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்தவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.