நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வெற்றிபெற்றால் பாதுகாப்பு செலவீனம் அதிகரிக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார்.
இதற்கமைய பாதுகாப்புக்கென மொத்த தேசிய உற்பத்தியில் 3 சதவீதம் ஒதுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், பாதுகாப்பு படை வலுப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் இடம்பெற்றுவரும் மோதல்களை அடிப்படையாகக்கொண்டே பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.