ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவில் முதல் நாளன்று 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியான 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்களிப்பில் 3 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்திருந்தனர்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை முதற்கட்ட வாக்களிப்பு வீதம் சடுதியாக அதிகரித்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில், முதல் நாளன்று 59 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 115 சதவீத அதிகரிப்பாகும்.
ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும், தேர்தல் தினத்துக்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 50 சதவீதமானோர்வரை வாக்களித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சபா.தயாபரன்