போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டில் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் லிபரல் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான டேவிட் ஸ்பியர்ஸ் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிருபணமாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போதைப்பொருளை வழங்கியதாக அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த போதைப்பொருள் விநியோக குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டதையடுத்து அவர் குற்றவாளியென அடிலைட் நீதி மன்றம் அறிவித்தது.
இதன் படி குற்றவாளியான டேவிட் ஸ்பியர்ஸ், 9 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் 37.5 மணி நேரம் சமூக நலன் கருதிய வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தீர்பளித்தது.