முதலாம் உலகப் போரில் உயிரிழந்த ஆஸ்திரேலிய இராணுவத்தினரின் உடல்கள் 107 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டன
அன்சாக் தினத்தை முன்னிட்டு வடக்கு பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட களப்பணி நடவடிக்கையின் போது முதலாம் உலகப் போரின் போது இறந்த நான்கு ஆஸ்திரேலிய வீரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படிஇ மே 1917 இல் நடந்த இரண்டாவது புல்கோர்ட் போரின் போதே இவ் வீரர்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
போரின் போது ஜெர்மன் ஹிண்டன்பர்க் கோட்டின் பாதுகாப்பு எல்லைகளை மீற முயன்றபோது ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியப் படையின் 10,000 வீரர்கள் வரை காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.