சீனாவில் வைத்து ஆஸ்திரேலிய கடற்படைக்கு புதிய படகுகள் உருவாக்கப்பட்டு டார்வினுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
ஆஸ்திரேலிய கடற்படைக்கான புதிய படகுகளுக்கள் தயாரிப்பு ஒப்பந்தம் நியூஸிலாந்தை தலைமையாகமாக கொண்ட டச்சுக் கம்பனி ஒன்றுக்கே வழங்கப்பட்டருந்தது.
சுமார் 28 மில்லியன் டொலர் பெறுமாதியான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சீன கப்பல் கட்டும் தளத்தில் ரகசியமாக இப் படகுகள் உருவாக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளைஇ ஹுனான் மாகாணத்தில் உள்ள டாமன் நிறுவனத்தின் "அதிநவீன" சாங்டே வசதியில் உருவாக்கப்பட;ட மூன்று துறைமுக இழுவைப் படகுகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் டார்வினுக்கு கொண்டு வரப்பட்டன என ABC பெற்றுக்கொண்ட சான்றிதழ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளைஇ சீனாவில் இழுவைப் படகுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும்இ வியட்நாமில் அடுத்தடுத்த "பொருத்துதல்" நடப்பதாகவும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியது.
ஆனால் அவை "ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் அல்ல என்றும் தனிநபர்களால் இயக்கப்படும் படகுகளே என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்ப்ட்டுள்ளது.