சிட்னி தென்மேற்கு பகுதியிலுள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் முதியோர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் பெண் பணியாளர்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
46 வயதான குறித்த பெண், 7 முதியவர்களை இவ்வாறு கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அவரின் தொலைபேசியை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது பாலியல் துஷ் பிரயோகத்தை சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் இருந்துள்ளன. வீடியோக்களை 54 வயதான தனது ஆண் சகா ஒருவருக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் மார்ச் மாதம் ஆரம்பமாகி இருந்தாலும், இவர்கள் இருவர்மீதும் தற்போதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஆகஸ்ட் 4 முதல் 27 வரையான காலப்பகுதியிலேயே 5 ஆண்கள் மற்றும் இரு பெண்கள், பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணும், அவரது ஆண் சகாவும் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது.