மெல்பேர்ணில் ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
விருந்துபசாரமொன்றின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 6 பிள்ளைகளின் தந்தையானது 30 வயது நபரொருவர் கொல்லப்பட்டார்.
அவர் சட்டவிரோத மோட்டார் சைக்களில் கும்பலுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படுகின்றது.
அவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மெல்டனைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவர் இன்று மெல்பேர்ண் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது பொலிஸ் காவலில் உள்ள அவர், எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
கொலை சம்பவம் தொடர்பில் விக்டோரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.