நியூகேஸில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பார் பீச்சிலுள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் நடந்த மோதலின்போது 18 வயதான ஏகாம்ப்ரீத் சாஹ்னி சிங், நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் பகுதிநேர தொழிலில் ஈடுபட்டு கல்வி கற்றுவந்த மாணவரென தெரியவந்தள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், 22 வயது இளைஞர் ஒருவர் இன்று பொலிஸில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.