Northern Territory பகுதியில் கடுமையான பிணை சட்டங்கள், அவசரமாக இயற்றப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்குரிய நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை நாடாளுமன்றம் அவசரமாக கூடவுள்ளது என்று Northern Territory முதல்வர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் Northern Territory பகுதயிலேயே கடுமையான பிணை சட்டங்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
டார்வினில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 71 வயது நபரொருவர் நேற்று முன்தினம் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே பிணை சட்டங்களை கடுமையாக்குவதற்குரிய சட்டம் இயற்றும் நடவடிக்கை விரைவு படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பிணை வழங்கும்போது அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Northern Territory பகுதியில் பூர்வக்குடி மக்களே பெருமளவில் வாழ்கின்றமை தெரிந்ததே.