குயின்ஸ்லாந்து தேசிய பூங்காவிலுள்ள நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து 36 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 80 அடி உயரத்தில் இருந்தே இப்பெண் கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவருக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சையளித்தாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
பெண்ணின் மரணம் சந்தேகத்துக்கிடமானதாக கருதப்படவில்லை. குயின்ஸ்லாந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் சன்ஷைன் கடற்கரை நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.