ஆஸ்திரேலியாவின் வடக்குக் கடற்கரையில் சட்டவிரோதமாக வந்திறங்கிய படகு ஆஸ்திரேலிய எல்லைப் படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதே சமயம் அதில் பயணம் செய்த ஐந்து ஆண்களும் ஆஸ்திரேலிய எல்லைப் படையால் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மணலில் SOS எழுதப்பட்டிருப்பதை ரோந்துப்படை ஹெலிகாப்டர் விமானி கவனித்த பின்னர் சட்டவிரோத படகில் பயணித்த ஐந்து ஆண்களை அதிகாரிகள் கைது செய்ததாக ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் டோனி பர்க் சட்ட விரோத வருகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
கூட்டணி உள்துறை செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் பேட்டர்சன் இதை "ஆழ்ந்த கவலைக்குரியது" என்று விரைவாக முத்திரை குத்தியுள்ளார்
ஒரு அறிக்கையில், குடிவரவு அமைச்சர் டோனி பர்க், அரசாங்கம் செயல்பாட்டு விஷயங்களை உறுதிப்படுத்தவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ இல்லை என்று கூறினார்.
அவர்கள் ஆட்கடத்தல்காரர்களா அல்லது சட்டவிரோத மீனவர்களா என்பது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சபா.தயாபரன்.