ஆஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்!
ஆஸ்திரேலியாவின் தேர்தல் முறைமை உலகில் மிகவும் நம்பகமான ஒன்றாகும். அத்துடன் ஒவ்வொரு வாக்காளரும் அதைப் பாதுகாப்பதில் பங்கு வகிக்கின்றனர்.
தேர்தல் செயல்முறை பற்றிய பொய்யான அல்லது தவறான வழியில் இட்டுச் செல்லும் தகவல்கள் உங்கள் கவனத்திற்கு வரலாம். நீங்கள் பார்க்கும், கேட்கும் மற்றும் படிக்கும் தகவல்களின் உள்ளடக்கம் என்ன என்றும் அவை எங்கிருந்து வருகின்றன என்றும் சிந்திப்பது முக்கியம்.
பின்வருவனவற்றை கவனியுங்கள்:
● அதிர்ச்சி, கோபம் அல்லது மனக்கிளர்ச்சி போன்ற வலுவான உணர்வுகளைத்
தூண்டுகிற உணர்ச்சிவசப்படுகிற மொழி
● பொருத்தமில்லாத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாதங்களை ஒன்றாக
இணைத்தல்
● அனைத்துத் தேர்வுகளைப் பற்றியும் தகவல் அளிப்பதற்குப் பதிலாக சிறிய
எண்ணிக்கையிலான தேர்வுகளை அளித்தல்
● ஒரு நபர் / குழு மாத்திரமே பொறுப்பில்லாத போது, ஒரு குறிப்பிட்ட நபர்/குழு மீது மட்டும் குற்றம் சாட்டுதல்
● விவாதத்தில் கவனம் செலுத்துவதை விட நபரைத் தாக்குதல்
● மேலும் கேள்விகளைக் கேட்பதன் மூலம் தவறான கூற்றுகள்/அறிக்கைகளை
மறைத்தல்
● அனைத்துத் தகவல்களையும் காட்டாமல் வலுவான கூற்றுகள் அல்லது உண்மைகள் அல்லது கதையின் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல்.
ஆதாரத்தைச் சரிபார்க்கவும்:
● தகவல் எங்கிருந்து வந்தது? நம்பகமான இடத்திலிருந்து வந்ததா?
● இது எப்படி உருவாக்கப்பட்டது? AI தொழில்நுட்பம் தவறான உரை, படங்கள்,
காணொளி மற்றும் ஆடியோவை உருவாக்குவதை எளிதாக்குகிறது.
● இது எப்போது வெளியிடப்பட்டது? பழைய தகவல்கள் சில சமயங்களில் புதிதாகத் தோன்றலாம்
● இது ஏன் வெளியிடப்பட்டது? உண்மையில்லாத ஒன்றை யாராவது உங்களை நம்ப வைக்க முயற்சிக்கும் காரணமாக இருக்கலாமா?
AEC இணையதளத்தைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் தவறான தகவல்களில்
இருந்து உண்மையை அறியலாம்.
● வாக்குச் சீட்டை எவ்வாறு பூர்த்தி செய்வது
● எப்போது வாக்களிக்க வேண்டும்
● விருப்பத்தேர்வுகள் எவ்வாறு செயல்படுகின்றன
● வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன
● விளைவு எப்படி முடிவு செய்யப்படுகிறது
● பாதுகாப்பு, கூர்ந்தாய்வு மற்றும் பிற பாதுகாப்புகள்.
நமது தேர்தல் முறைமையின் நேர்மையை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தைத் தகவலைக் கவனத்துடன் அணுகுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளியுங்கள்.
மேலும் உதவிக்குறிப்புகளுக்கு, aec.gov.au/translated ஐப் பாருங்கள்..........
