ஆஸ்திரேலிய கடற்படையினர் எட்டு பேர், அமெரிக்க கடற்படையின் அணுசக்தி பயிற்சிப் பிரிவில் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் உலைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளை இயக்கத் தகுதி பெற்ற முதல் ஆஸ்திரேலியர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். ஆறுமாத கால பயிற்சியை முடித்துக்கொண்டு கடந்த 18 ஆம் திகதி அது தொடர்பான சான்றிதழைப் பெற்றுள்ளனர்.
அணு இயற்பியல், உலை கொள்கைகள் மற்றும் அணு உலை தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வகையிலேயே மேற்படி பயிற்சி திட்டம் அமைந்திருந்தது.
பெறப்பட்ட திறன்கள் , அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமைப்புகளை சுயாதீனமாக இயக்க அல்லது அமெரிக்க குழுக்களுடன் ஒருங்கிணைக்க அனுமதிக்கும்.
அணுசக்தியால் இயக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை தமது நாட்டு கடற்படையில் இணைப்பதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவுடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்.