ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு நடைபெற்ற இறுதி நேரடி விவாதத்தின் வெற்றியாளராக பிரதமர் அந்தோனி அல்பானீஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராய் மோர்கன் நெறிப்படுத்திய மேற்படி விவாதத்துக்கு பின்னரான தரவுகளின் அடிப்படையில் 50 சதவீத வாக்காளர்கள், அல்பானீஸ் வெற்றியாளர் எனக் கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனுக்கு 25 சதவீதமானோர் வாக்களித்தனர். 22 சதவீதமானோர் எவருக்கும் வாக்களிக்கவில்லை.
வாழ்க்கைச் செலவு விவகாரத்தை பெறுத்தவரை, 65 சதவீதமானோர் அல்பானீஸ{க்கும், 16 சதவீதமானோர் பீட்டர் டட்டனுக்கும் வாக்களித்துள்ளனர்.
வீட்டுவசதிப் பிரச்சினை தொடர்பில் இருவருக்கும் சம அளவில் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பூர்வக்குடி மக்கள் விவகாரம் தொடர்பில் டட்டனுக்கு 46 சதவீதமானோர் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு கொள்கை விவகாரத்திலும் அவரே முன்னிலை வகித்தார்.
இறுதியில் மொத்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதமர் 2:1 என்ற வித்தியாசத்தில் விவாதத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
சபா.தயாபரன்