லேபர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச மாணவர் விசாக் கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய விசாக் கட்டணம் ஆயிரத்து 600 டொலர்களில் இருந்து 2 ஆயிரம் டொலர்கள்வரை அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பல்கலைக்கழகங்களுக்குரிய விசா கட்டணமாக 5 ஆயிரம் டொலர்கள் நிர்ணயிக்கப்படும் எனவும், ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு 2,500 டொலர்கள் விசாக் கட்டணமாக அறிவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.