மோர்டன் தீவைச் சேர்ந்த நபரொருவர்மீது 28 போதைப்பொருள் மற்றும் சிறார் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதிக்கப்பட்ட ஏழு சிறார்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
31 வயதான குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது பல சாதனங்கள் மீட்கப்பட்டன.
அதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஒன்லைன் மூலம் சிறார்கள் விற்பனை, பாலியல் செயலுக்காக குழந்தைகளை பயன்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் தெரியவந்தன.
தென்குயின்ஸ்லாந்தில் இரு சிறார்களும், தாய்லாந்தில் ஐந்து சிறார்களும் மீடக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.