சிட்னி தென்மேற்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பாரிய லொறியொன்றும், காரும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
24 வயதான லொறி சாரதி கைது செய்யப்பட்டு, மருத்து பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சபா.தயாபரன்.