போர் காலத்தில் புலிகள் அமைப்பிடமிருந்து , இராணுவம் கைப்பற்றிய பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி என்பன பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்றது.
பொலிஸ்மா அதிபரினால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த தங்கம் மற்றும் வெள்ளி என்பன நீதிமன்ற உத்தரவுக்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையினால் மதிப்பிடப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை முடிவடைந்த பின்னர் அவை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படும்.
அதேவேளை, பொது மக்கள் தங்க ஆபரணத்துக்குரிய அடையாளத்தை உறுதிப்படுத்தினால் அவற்றை மீள கையளிப்பதற்கு தயார் என இராணுவம் தெரிவித்துள்ளது.