குயின்ஸ்லாந்தில் கிறீன்ஸ் கட்சிக்கு ஏமாற்றம்!
2022 நாடாளுமன்றத் தேர்தலில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மூன்று இடங்களில் வென்ற கிறீன்ஸ் கட்சியினர், இம்முறை பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
எனினும், கிறீன்ஸ் கட்சிக்குரிய முதன்மை வாக்கு வீதம் இத்தேர்தலில் அதிகரித்துள்ளது. 2022 தேர்தலில் 12 சதவீதமாக இருந்த முதன்மை வாக்கு இம்முறை 12. 67 வீதமாக அதிகரித்துள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Griffith, Ryan மற்றும் பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் கிறீன்ஸ் கட்சிக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளது.
2022 இல் கிறீன்ஸ் கட்சிக்குரிய ஆதரவு வலுத்ததால் 'குயின்ஸ்லேன்ட்", 'கிறீன்லேன்ட்" என்றுகூட அழைக்கப்பட்டது. எனினும், இம்முறை பலத்த அடி விழுந்துள்ளது. எனினும், விக்டோரியாவில் கிறீன்ஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.