ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சிபீடமேறுவதை லேபர் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்தில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த இலக்கை லேபர் கட்சி அடைந்துள்ளது.
லேபர் கட்சியின் வெற்றியை அடுத்து, அந்தோனி அல்பானீஸி மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதம் ஆகிறார்.
கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்தோனி அல்பானீஸி அமைச்சரானார். ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த அவர் கெவின் ரூட்டின் குறுகியபதவிக் காலத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.
2019 ஆம் ஆண்டு எதிர்பாராத தோல்விக்குப் பிறகு அவர் லேபர் கட்சியின் தலைவரானார். பத்து ஆண்டுகால லிபரல்- தேசிய கூட்டணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 2022 இல் அவர் பிரதமரானார். தற்போது மீண்டும் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலானது எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனுக்கு மரண அடியாக அமைந்துள்ளது. அவர் தனது சொந்த தொகுதியிலேயே மண்கவ்வியுள்ளார். இதனால் அவரின் கட்சி தலைமைப்பதவி குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளை, கிறீன்ஸ் கட்சிக்கும் இத்தேர்தல் ஏமாற்றமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.