ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழர் பிண்ணி கொண்ட Ashvini Ambihaipahar வெற்றிபெற்றுள்ளார்.
நியூ சவூத் வேல்ஸில், பார்டன் தொகுதியில் இவர் இம்முறை களமிறங்கினார்.
46 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று அவர் வெற்றியை உறுதி செய்துள்ளார். அவர் முதன்முறையாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.
வெற்றிக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமூகம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
இவர் ஈழத்து கவிஞரான அம்பிகைபாகரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.