விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பகுதியில் சேலுக்கு வடக்கே நேற்று நடைபெற்ற கார் விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிரியாகோலாங் என்ற சிறிய நகரத்திற்கு அருகிலுள்ள பிரியாகோலாங் சாலையில் கார் ஒரு தடுப்பில் மோதிய பின்னர் உருண்டு விழுந்ததாகக் கருதப்படுகிறது.
அவசர சேவைகள் சம்பவ இடத்தில் விரைந்த போது இரண்டு பேர் இறந்து கிடந்ததைக் கண்டனர். மற்றும் படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த 30 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் பதினம வயதுப் பெண்ணுக்கும் துணை மருத்துவர்கள் முதலுதவிச் சிகிச்சை அளித்தனர்,
பின்னர் ஆபத்தான நிலையில் மெல்போர்ன் ஆல்ஃபிரட் மருத்துவமனைக்கு அந்தப் பெண் கொண்டு செல்லப்பட்டார். பதின்ம வயதுப் பெண் ரோயல் குழந்தைகள் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நான்கு பயணிகளும் இன்னும் முறையாக அடையாளம் காணப்படாத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக விக்டோரியா காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சபா.தயாபரன்.