ஆஸ்திரேலிய பிரதமருக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளது. இது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் வர்த்தகப்போரை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி வன்மையாகக் கண்டித்திருந்தார். அத்துடன், தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்பின் அணுகுமுறையுடன் எதிர்க்கட்சி தலைவரை அவர் ஒப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கனடா பிரதமர் மற்றும் பசுபிக் தீவுகள் நாடுகளின் தலைவர்களும், ஆஸ்திரேலிய தேர்தலில் வென்றுள்ள பிரதமர் அந்தோனி அல்பானீசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.