நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஆணாதிக்கவே பிரதான காரணம் என அக்கட்சி உறுப்பினரான லிண்டா ரெனால்ட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், லிபரல் கட்சியின் தலைமைப்பதவி சுசான் லேக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சியால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம் பாரிய தோல்வி எனவும், பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் செனட்டர் லிண்டா ரெனால்ட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபா.தயாபரன்