ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக தெரிவாகியுள்ள அந்தோனி அல்பானீஸிக்கு இந்திய பிரதமர் மோடி, தொலைபேசி ஊடாக நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன், இரு நாட்டு தலைவர்களும் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் விவாதித்துள்ளனர். இந்தோ - பசுபிக் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு கூட்டாண்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
' ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது. நமது பிராந்தியத்திற்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க வரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். " - என்று பிரதம் மோடியிடம் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய, பாகிஸ்தான் பதற்ற நிலை பற்றி இதன்போது பேசப்பட்டதா என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.