நியூ சவூத் வேல்ஸ் பொலிஸ் ஆணையாளர் கரேன் வெப், தனது பதவி காலம் முடிவடைவதற்கு இரு வருடங்களுக்கு முன்னரே பதவி விலகும் அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி அவர் சேவையில் இருந்து விடைபெறுகின்றார்.
புதிய பொலிஸ் ஆணையாளரை உரிய வகையில் தெரிவு செய்வதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்கும் வகையிலேயே உடனடியாக பதவி விலகாமல், செப்டம்பர் 30 ஆம் திகதிவரை அவர் காலம் எடுத்துள்ளார்.
கரேன் வெப் 2022 ஆம் ஆண்டு நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். மாநிலத்தின் முதல் பெண் காவல் ஆணையாளர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.