ஆஸ்திரேலிய அரசியலில் மிக முக்கிய அரசியல் வாதிகளுள் ஒருவராகக் கருதப்படும் செனட்டர் ஜெசிந்தா பிரைஸ், கட்சி தாவியுள்ளார்.
நெஷனல்ஸ் கட்சி உறுப்பினரான அவர், லிபரல் கட்சியுடன் சங்கமித்துள்ளார். இனி அக்கட்சியுடன் தனது பயணம் தொடரும் என அறிவித்துள்ளார்.
அவர் லிபரல் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றார் என தெரியவருகின்றது.
அங்கஸ் டெய்லர் அணி சார்பகவே அவர் களமிறங்குவதால் தனது தலைமைப்பதவி தொடர்பில் டெய்லர் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகின்றது . ஜெசிந்தா பிரைஸ் லிபரல் கூட்டணியின் பூர்வக்குடி செய்தி தொடர்பாளராகவும், வடக்கு பிரதேச செனட்டராகவும் செயற்பட்டுவந்தார்.
பூர்வக்குடி மக்களுக்கான குரல் வாக்கெடுப்பின்போது 'நோ" பிரச்சார அணியில் முக்கிய பதவியை வகித்தார். நெஷனல்ஸ் கட்சி லிபரல் கட்சியுடன் கூட்டணி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.