லிபரல் கட்சிக்குரிய புதிய தலைவர் அடுத்த வாரம் தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், அப்பதவிக்கு கட்சிக்குள் வலுவான இருமுனை போட்டி நிலவுகின்றது.
துணைத் தலைவர் சுசான் லே மற்றும் கருவூல செய்தித் தொடர்பாளர் அங்கஸ் டெய்லர் ஆகியோரே தலைமைப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
லிபரல் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது. இதற்குரிய முன்னாயத்தக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.
லிபரல் கட்சி தலைவராக பதவி வகித்த எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தான் 24 வருடங்களாக தக்கவைத்து வந்த பிரிஸ்பேன், டிக்சன் தொகுதியில் லேபர் கட்சி வேட்பாளர் அலி பிரான்ஸிடம் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.