Adelaide வடக்கு பகுதியில் பெண்ணொருவரை குத்திக்கொலை செய்தார் எனக் கூறப்படும் யுவதிக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
28 வயதான பெண்ணொருவர்மீதே நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 25 வயது பெண் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பிணை கோரப்படவில்லை.
இதனையடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம்வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யுவதியும், தாக்குதல் நடத்திய யுவதியும் நண்பர்களென தெரியவந்துள்ளது.