மெல்பேர்ணில் நடைபெறும் ஆயுதக் கண்காட்சிக்கு எதிராக இன்று மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்றது.
இதன்போது போராட்டக்காரரான பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆயுதக் கண்காட்சி நேற்று முன்தினம் ஆரம்பமானது. அன்றைய தினம் பெருந்திரளான போராட்டக்காரர்கள் பங்கேற்றிருந்தாலும் இன்று எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. நேற்று வன்முறை எதுவும் பதிவாகாதபோதிலும் மெல்பேர்ண் மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் ஐவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்தும் விதம் தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தாலும், மாநில பிரீமியர் பொலிஸாரின் நடத்தையை நியாயப்படுத்தியுள்ளார்.