மெல்பேர்ண் விமான நிலையத்திற்கான மூன்றாவது ஓடுபாதையை நிர்மாணிப்பதற்கு கூட்டாட்சி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்மூலம் விமான தாமதங்கள் தடுக்கப்படும் என்பதுடன், விக்டோரியா பொருளாதாரம் வலுவடையும் என நம்பப்படுகின்றது.
இதற்காக 3 பில்லியன் டொலர்கள் திட்டத்தை அரசு இன்று அறிவித்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாத்தின் அடிப்படையில் திட்டம் அமுலாகும்.
புதிய ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டு 2031 ஆம் ஆண்டு அது பயன்பாட்டுக்கு வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 51 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உதயமாகும் எனவும், மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு வருடாந்தம் 6 பில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெறும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.