மத்திய விக்டோரியா பகுதியில் இடம்பெற்ற இலகு ரக விமான விபத்தில் விமானி பலியாகியுள்ளார்.
இன்று மதியம் 12.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் விமானி மட்டுமே சென்றுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.